karur karthik
Tuesday, February 25, 2014
வெயில் குடித்த காற்று
நிசப்த சூரியனோடு சகவாசம் வைத்த காற்று
நடுப்பகலில் வெயில் குடித்தது
நிழல் தேடி அலைந்த என்னிடம்
கொப்பளித்துத் துப்பிய வெயிலின் சூட்டில்
நான் நீர்த்துப் போகிறேன் கானலாய் .
Tuesday, April 17, 2012
எனக்கான நாளைகளை
நான்
என்றைக்குமே சேமித்தது கிடையாது தோழி
எனது இன்றைகள் எல்லாவற்றையுமே
உனக்காகச் செலவழிக்கும் ஒருவனால்
எப்படி முடியும் எனது இன்றில் உறைந்து கிடக்கும் உன்னை விலக்கி
எனக்கான நாளை நினைக்க?
Saturday, February 18, 2012
ஒரு நெடும் பாலைப் பிரிவை
பிரமிள் தொடங்கி இசை வரையிலும்
வாசித்தாலும் இன்னும்
உறுத்திக் கொண்டிருக்கின்றன வார்த்தைகள் எழுத வராமல்.
நீருக்குள் கால் வைத்த நாள் கொண்டு
அரித்துக் கொண்டிருக்கிறது மீன்கள்
என் கொண்டாட்டங்களையும் தூக்கங்களையும்.
பாசமாய் கொடுத்த உன் இனிப்புருண்டையினை
உதிர்த்துத் தின்ற நாளில் உதிராத பிரியங்கள்
நீ விலகி நின்ற நாட்களில்
உதிரத் தொடங்கிவிட்டன
இவ்வளவு தான் சொல்ல முடிகிறது ஒரு நெடும் பாலைப் பிரிவை .
சிறு பூ
கதவடைத்த சிறு பூ
காற்று வாங்க கெஞ்சும்
ஜன்னல்களையும் கதவினையும் .
Friday, January 20, 2012
Thursday, January 19, 2012
ஓடிய பேருந்தைப் பார்த்து
கையசைத்தது குழந்தை.
ஒருவரும் பார்க்கவில்லை.
கடைசியில் போவோர் வருவோரையெல்லாம்
அழைத்துக் காட்டியது
தன் விழிகளுக்குள் ஓட விட்ட பேருந்தை.
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)